என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூர்வாரும் பணிகள்"
- தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணி நடைபெற்றது.
- உழவர் குழுவினர் உள்ளிட்ட பலர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் அருகே தில்லையாடி கிராம ஊராட்சியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ. 21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணி நடைப்பெற்றுவருகிறது.
இந்நிலையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், தாசில்தார் காந்திமதி, ஊராட்சி செயலர் செல்வராணி, மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர், உழவர் குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகள்
- பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட் டத்தில் எதிர்வரும் வட கிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் மேற் கொள்ள வேண்டிய முன் னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிரெய்லி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய சானல் மற்றும் குளக்க ரைகளை சீரமைக் கும் பணி களை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கடலோரப் பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப் பட்டது. மேலும் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தாக நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜேசிபி. மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப் படை வசதிகள் உள்ள னவா என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மனாபபுரம் சப்-கலெக் டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது
- அப்பகுதிகளில் துா்நாற்றம் வீசியது.
கரூர்:
தொடா்மழையால் கரூா் குளத்துப்பாளையம் பகுதியில் கழிவு நீா் வாய்க்காலில் மழைநீருடன் கழிவு நீரும் வெளியேறியதால் ஏற்பட்ட அடைப்பை தூா்வாரும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூா் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு 2.4 மி.மீ. மழை பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் உள்ள குளத்துப்பாளையம், திட்டச்சாலை, பெரியாா் காலனி, பிள்ளையாா் கோவில் தெரு, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீருடன் மழைநீரும் வெளியேறியதால் அப்பகுதிகளில் துா்நாற்றம் வீசியது.
- குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. 60 அடி உயரம் உடைய திருமூர்த்தி அணையின் மூலம் திருப்பூர் , கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன. மேலும் உடுமலை நகராட்சி பூலாங்கிணறு ,கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அணையை தூர்வாரி கூடுதல் நீரை சேமிக்கும் வகையிலும் விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி ,பெருமாள் கரடு, கோனக்கரடு பகுதியில் இருந்து விவசாயிகளிடம் இருந்து அணை கட்ட கையகப்படுத்தப்பட்ட சுமார் 300 ஏக்கர் பரப்பளவு நிலம் வீணாக உள்ளது. எனவே விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிப்பதோடு அணையை தூர்வார நிதியை ஒதுக்கி கிழக்குப் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள 300 ஏக்கர் நிலத்தையும் ஆழப்படுத்த வேண்டும் .மேலும் நீர் தேங்கும் பரப்பில் உள்ள மண்மேடான பகுதிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று அணையில் தூர்வாரி வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கு அனுமதி பெற பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட கலெக்டர் விதித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர் . விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கான உத்தரவு தபாலில் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அணையில் தூர்வாரும் பணி தொடங்கியது .பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு டிப்பர் லாரியில் வண்டல் மண்ணை கொட்டி விவசாயிகளின் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னை-தண்டையார்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அருகில் நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்க வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருவழிப்பாலம்,
பழனி, மாட்டு மந்தை அருகில் பாலாற்றின் குறுக்கே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம், செய்யூர் வட்டம், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 9 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறு கட்டுமானம் செய்யப்பட்ட ஒரு வழிப்பாலம் என மொத்தம் 240 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி ஆகிய ஏரிகளில் 124 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகள் என மொத்தம் 532 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீர்வள ஆதாரத்துறையின் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை, சேத்துப்பட்டு பொழுதுபோக்கு மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்கா வளாகத்தில் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதிகளுடன் கூடிய மெய்நிகர் காட்சியக அரங்கம், தொடுதிரை கணினி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் காட்சியகத்துடன் கூடிய மெய்நிகர் காட்சியகம்,
மாதவரம் வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன் வானவில் விற்பனை வளாகம் என மொத்தம் 21 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
உயர் கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
2018-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளையும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச்செம்மல் விருதுகள் என மொத்தம் 56 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். #EdappadiPalaniswami
தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் வராத கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகியவற்றை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடிக்கும், 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதாகவும், இதன்மூலம் 3 ஆயிரத்து 854 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் உலக வங்கியில் கடனுதவி ரூ.3 ஆயிரத்து 8 கோடி, பருவ நிலை மாற்ற திட்டத்தின் கீழ் ரூ.215 கோடி, அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 360 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச தெரிவித்துள்ளது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் எந்த ஆற்றிலும், வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. அதனால் தான் கடைமடை வரை எந்த ஒரு வாய்க்காலிலும் தண்ணீர் வந்து சேரவில்லை.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேராததால் 24-ந் தேதி (நாளை) பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டமும், 28-ந் தேதி பேராவூரணியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த நிதி அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இனியாவது போர்க்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, தூர்வாரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று விட்டதாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #DeltaDistrict
காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதி முழுவதும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பி அதன் மூலம் பாசனம் பெற்று ஒரு போக சாகுபடி நடைபெறும்.
செங்கிப்பட்டி பகுதி ஏரிகளுக்கு புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீடிப்பு கால்வாய்களின் வழியாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெற்று 77 ஏரிகள் நிரப்புவதன் மூலம் 10ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி நடைபெறும். கடந்த 7 ஆண்டுகளாக முறையாக தண்ணீர் கிடைக்காததால் இந்த பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் ஏரிகள் அனைத்தும் முட்புதர்கள் முளைத்து காணப்பட்டன.
இந்த ஏரிகள் அனைத்தையும் தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று திருச்சியை மையகமாக கொண்டு செயல்படும் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு கோட்டத்தின் சார்பில் 16 ஏரிகள் ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகளை வலுப்படுத்தி மதகுகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூதலூர் ஒன்றியத்தில் செய்யப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி சுப்பையன் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். ராயமுண்டான்பட்டியில் மருவத்தி ஏரி, நெப்பி ஏரி ஆகிய ஏரிகளை தூர் வாரி கரைகளை உயர்த்தி இருக்கும் பணிகளையும், உய்யகுண்டான் நீடிப்பு கால்வாயில் ரூ.5 லட்சம் மதிப்பில் 3 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கும் பணிகள், புதிய கட்டளை மேட்டு கால்வாயில் ரூ.7 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், மதகுகள் சீரமைப்பு, சிறிய அளவிலான குடிமராமத்து பணிகளை அதிகாரி சுப்பையன் ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் விரைவில் தரமாக முடிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளுடன் திருச்சி ஆற்று பாசன கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்இருந்தனர்.
அப்போது ஏரிகளின் கரைகளை உயர்த்தும் பணிகளும், ஆழப்படுத்தும் பணிகளும் சரியாக நடைபெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்